இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது

Sep 16 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

பாலஸ்தீன பிரச்சனை காரணமாக இஸ்ரேல் நாட்டை அரபு நாடுகள் புறக்கணித்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடன் அரபு நாடுகள் நட்புறவு பேணுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வந்தார். இதன் பலனாக கடந்த மாதம் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் விமான சேவை தொடங்கப்பட்டது. இது இருதரப்பு உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு மைல் கல்லாக இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையேயான ஒப்பந்தம் அமெரிக்காவில் இன்று கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் Abdullah bin Zayed Al Nahyan மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் Abdullatif bin Rashid Al Zayani ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4வது இஸ்லாமிய நாடாக இதன் மூலம் அமீரகம், பஹ்ரைன் உருவெடுத்துள்ளது. இதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00