பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவுக்கு உதவுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம் - அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

Sep 16 2020 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவுக்கு உதவுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்துக்கான அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளிலும், பயங்கரவாத சதிச் செயல்களிலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு, கடந்த 2017-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான இந்தியாவின் முறையீட்டை விசாரித்த சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்பை மறுஆய்வு செய்யும் வகையிலான அவசரச்சட்டத்தை, பாகிஸ்தான் அரசு கடந்த மே மாதம் இயற்றியது. அந்த அவசரச்சட்டத்துக்கான அவகாசம், நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அந்த அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு, பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00