அமெரிக்காவில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்‍கும் - அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை

Sep 19 2020 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக, அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அதிபர் தேர்தலுக்கு முன், தடுப்பூசியை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் போதுமான டோஸ்களில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மூன்று கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனையில் இருப்பதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் சுமார் பத்து கோடி டோஸ்கள் தடுப்பூசி தயாரிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00