பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விட்டது; முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு

Sep 21 2020 6:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விட்டதாக என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர்க்கட்சிகள் தலைமையிலான அனைத்து கட்சி மாநாட்டில், காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் தூக்கிலிடப்படுவது, கைது செய்யப்படுவது அல்லது தகுதி நீக்கம் என அறிவிக்கப்படுவது ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர் என தெரிவித்துள்ளார். நாட்டில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய எந்த பிரதமரும் அனுமதிக்கப்படுவதில்லை என ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முழுவதும் அழிந்து போய் விட்டதாக விமர்சித்தார்.

பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு நேபாளத்தின் ரூபாய் மதிப்பிற்கும் கீழே சென்று விட்டதாக குற்றம்சாட்டிய நவாஸ், இம்ரான் கான் அரசு தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்துடன் விளையாடும் உரிமையை, சர்வாதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், சாசனத்தை முறையாக பின்பற்றுவோர் இன்னும் சிறையிலேயே உள்ளனர் என நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00