‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

Sep 24 2020 6:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
நைஜீரியாவில் டாங்கர் லாரி வெடித்துச் சிதறி தீ பற்றிய விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.

கோகி மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த டாங்கர் லாரி எதிர்பாராமல் வெடித்துச் சிதறியது. அந்த லாரி பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்‍கள் தெரிவித்தனர். பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றின் அருகே இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில ஆளுனர் யஹாயா பெல்லோ வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில் பொதுமக்‍கள் உயிரிழந்தது மட்டுமல்லாமல் ஏராளமான வாகனங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் ஒரே புகைமூட்டமாகத் தென்பட்டது. லாரி தீ பற்றி எரிந்ததால், அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00