கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு - மனிதர்களிடம் ஆராய்ச்சி தொடரும் என பிரசில் அரசு அறிவிப்பு

Oct 22 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவைக்‍ கட்டுப்படுத்த தற்போது ஆராய்ச்சியில் இருக்‍கும் தடுப்பூசியை எடுத்துக்‍கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டின் ஆஸ்ட்ராசெனிக்‍கா என்ற மருந்து தயாரிக்‍கும் பன்னாட்டு நிறுவனமும் மற்றும் ஆக்‍ஸ்போர்டு பல்கலைக்‍கழகமும் இணைந்து உருவாக்‍கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்‍கு செலுத்தி சோதனை செய்யும் ஆராய்ச்சி இந்தியா, பிரசில், இங்கிலாந்து, தென்னாப்ரிக்‍கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் தடுப்பூசியை எடுத்துக்‍கொண்ட ஒருவருக்‍கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், ஆகஸ்ட் மாதம் சில காலம் ஆராய்ச்சி நிறுத்திவைக்‍கப்பட்டது. இதேபோல், தான் தயாரித்த தடுப்பூசி ஆராய்ச்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்‍காவின் ஜான்சனன்ஜான்சன் நிறுவனமும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆஸ்ட்ராசெனிக்‍காவின் தடுப்பூசி ஆராய்ச்சி மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், பிரசில் நாட்டில் தடுப்பூசியை எடுத்துக்‍கொண்ட ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பிரசில் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஆஸ்ட்ராசெனிக்‍கா, ஆராய்ச்சி விதிகள் காரணமாக அவர் உயிரிழந்தது குறித்த மற்ற தகவல்களை தெரிவிக்‍க முடியாது என குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசியை எடுத்துக்‍கொண்டவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையிலும், மனிதர்களிடம் தடுப்பூசியை செலுத்தும் ஆராய்ச்சி தொடரும் என பிரசில் அரசும், மருந்து நிறுவனமும் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00