சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்‍கா - ரூ.17 ஆயிரம் கோடிக்கு நவீன ஏவுகணைகளை விற்க ஒப்புதல்

Oct 28 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்க்‍கு, 100 Harpoon ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வரும் நிலையில், இது தொடர்பாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்‍கு நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மூக்‍கை நுழைத்துள்ள அமெரிக்‍கா, தைவான் நாட்டுக்கு ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே வர்த்தகம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான மோதல் நீடிக்கும் சூழலில், தற்போது தைவான் விவகாரம் மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு 100 Harpoon ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரத்து 478 கோடி ரூபாயாகும். Harpoon ஏவுகணை, கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 500 பவுண்டு எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00