அமெரிக்காவில் போலீஸாரால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு சம்பவம் - எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை

Oct 28 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் Philadelphia நகரில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கருப்பின வாலிபர் வால்டர் வாலஸ் என்பவரை, போலீஸ் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். ஆனால், அந்த வாலிபர் கத்தியை கீழே போடாததால், துப்பாக்‍கியால் சுட்டுக்‍கொலை செய்யப்பட்டார்.

போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல், அந்நகரில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள், பிலடெல்பியா நகர வீதியில் இறங்கி போலீசாருக்கு எதிராக போராடினர். இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் கார்களுக்கும் தீ வைத்ததால், அப்பகுதியே போர்க்‍களம்போல் காட்சியளித்தது.

இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நகரின் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிப்பதால் போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00