கொரோனா தொற்று முதலில் எங்கே தோன்றியது? என்ற மோதலில் நாடுகள் ஈடுபடவேண்டாம் - உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்

Dec 1 2020 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்று முதலில் எங்கே தோன்றியது? என்பதில் உலக நாடுகளுக்‍குள் அரசியல் வேண்டாம் என்றும், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்‍க தடுப்பூசி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அமெரிக்கா மற்றும் இத்தாலியில் இருந்துதான் கொரோனா வைரஸ் முதலில் உருவானதாக அண்மையில் குற்றம்சாட்டிய சீனா, மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக தற்போது புகார் தெரிவித்துள்ளது. ஆனால், தன் மீதான தவறை மறைக்‍கவே சீனா இவ்வாறு பிற நாடுகள் மீது குற்றம் சுமத்துவதாக பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று முதலில் எங்கே தோன்றியது? என்பதில் உலக நாடுகளுக்‍குள் அரசியல் வேண்டாம் என்றும், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதுதான் முக்‍கிய பணி என்றும், பழிசுமத்தும் அரசியல் தேவையற்றது என்றும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00