ஈராக்கில் யாசிதி இன மக்கள் தாய் நாடு திரும்ப உதவி : புதிய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள ஈராக் ராணுவம்

Dec 3 2020 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்‍கில் இருந்து வெளியேறிய யாசிதி இனமக்‍கள் மீண்டும் தாய் நாடு திரும்பும் வகையிலான நம்பிக்‍கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஈராக்‍கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்‍கம் நிறைந்திருந்தபோது, யாசிதி இன மக்‍கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக சிறைபிடிக்‍கப்பட்டனர். இதனால் அந்த இன மக்‍கள் அகதிகளாக வெளியேறி சிரியா வழியாக துருக்‍கி நாட்டுக்‍குச் சென்றனர். தற்போது அவர்கள் தாய்நாடு திரும்பத் தேவையான நடவடிக்‍கைகளை ஈராக்‍ அரசு எடுத்துவருகிறது. ஆனால், யாசிதிகள் அதிக எண்ணிக்‍கையில் வசித்துவந்த சின்ஜார் மாகாணத்தில் ஈராக்‍ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தவிர பிற பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால், யாசிதி மக்‍கள் நாடு திரும்புவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் முயற்சியில் ஈராக் மத்திய அரசும், பாக்‍தாத் மாகாண அரசும் மேற்கொண்ட உடன்படிக்‍கையின் அடிப்படையில் தற்போது ஈராக்‍ ராணுவத்தினர் சின்ஜார் மாகாணத்தின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளனர். இதனால் யாசிதி இன மக்‍கள் நாடு திரும்புவதில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00