தென்னாப்பிரிக்காவில் காணப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுகிறது : சுகாதாரத்துறை நிபுணர்கள்
Jan 10 2021 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்காவில் காணப்படும் புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுவதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் 3 வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவை பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரசில் இருந்து மாறுபட்டவை என அந்நாட்டு கொரோனா தடுப்பூசி ஆலோசனைக்குழுவின் தலைவர் Barry Schoub தெரிவித்துள்ளார். வைரஸ்களில் RNA உருமாற்றம் நிகழ்வது இயல்பானது எனவும், உருமாறிய கொரோனாவை தடுக்கும் ஆற்றல், கொரோனா தடுப்பூசிக்கு உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். எடுத்துக்காட்டாக இன்ஃப்ளூயன்சா வைரசிற்கான தடுப்பூசிகள், உருமாறிய வைரசிற்கும் பொருந்தியதுபோல், கொரோனாவிற்கும் பொருந்துமெனவும், Barry Schoub தெரிவித்துள்ளார்.