மாணவர்களின் போராட்டத்துக்கு பணிந்த யாழ் பல்கலைக்கழகம் : முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு அனுமதி - அடிக்கல்

Jan 11 2021 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் கடந்த 8ம் தேதி நள்ளிரவில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அவசர அவசரமாக இடிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது. நினைவுத் தூண் இடிக்கப்பட்டதை கண்டித்தும் மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூண் அமைக்க வேண்டியும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று அதிகாலை மாணவர்களை சந்தித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா, மீண்டும் நினைவுத் தூண் அமைக்க அனுமதியளித்தார். இதையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் ​அதனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00