ஜப்பான் நாட்டின் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கம்
Jan 11 2021 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் நாட்டின் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
புவியின் வட அரைகோளத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு தொடர்ந்துவருகிறது. ஜப்பான், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய- அமெரிக்க நாடுகளில் சாலைகளில் இரண்டடி உயரத்துக்கு பனித்துகள்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டொயாமா உள்ளிட்ட வடமாநிலங்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன. இந்த வாகன ஓட்டிகளை ராணுவத்தினர் மீட்டு, தேவையான உதவிகளை அளித்துவருகின்றனர். இதே போல் குடியிருப்புக் கட்டடங்களின் முன்னால் குவிந்திருக்கும் பனித்துகள்களை அகற்றும் பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.