அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த வன்முறையில் பலியான காவல் துறை அதிகாரிக்கு ஏராளமானோர் அஞ்சலி
Jan 11 2021 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களின் வன்முறையில் பலியான காவல் துறை அதிகாரிக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அடுத்த அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பெயரை அறிவிக்கும் நடைமுறைகள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டபோது, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் குவிந்த ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் டொனால்ட் ட்ரம்ப் பேசியதே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மற்றும் உடமைகளை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் போது ஏராளமான காவல் அதிகாரிகள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் வெள்ளை மாளிகையில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.