அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நிகழ்ந்த கலவரம் - ட்ரம்பின் அதிபர் பதவியை பறிக்க ஜனநாயகக் கட்சியினர் தீவிரம்
Jan 12 2021 6:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்யும் முயற்சிகளில் ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த வன்முறையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தூண்டியதாக கருதப்படுகிறது. இதனால், அரசமைப்புச் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி, ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யவேண்டும் என துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சிகள் தற்போது தொடங்கியுள்ளன. இம்முயற்சி வெற்றிபெறவில்லை என்றால், ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நேரடியாக செனட் அவையில் முன்மொழியப்படும் என்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.