கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று - அறிகுறியில்லாத நபர்களிடமிருந்து பரவியதாக தகவல்
Jan 12 2021 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறிகுறிகள் இல்லாத நபர்களிடமிருந்து தான் கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என அமெரிக்காவின் சான்டீகோ பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டீகோ உயிரியல் பூங்காவில் கடந்த 6ம் தேதி இரண்டு கொரில்லாக்கள் தொடர்ந்து இருமலால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவற்றின் கழிவுகளை சோதனைக்கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை நடத்தியபோது, அவை கொரோனா வைரஸ் தொற்றுடன் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் பல கொரில்லாக்கள் இதுபோல் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்தது. இந்நிலையில், அறிகுறி இல்லாத பூங்கா பராமரிப்பாளர் ஒருவரிடமிருந்து தான் கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவேண்டும் என பூங்கா நிர்வாம் தற்போது அறிவித்துள்ளது.