ரஷ்யாவில் நேரிட்ட இருவேறு விபத்துக்களில் 12 பேர் உயிரிழப்பு - காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
Jan 12 2021 8:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் நேரிட்ட இருவேறு விபத்துக்களில் 4 ராணுவ விரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் யூரல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் 9 குழந்தைகள் உள்ளிட்ட 90 பேரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும், தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இதே போல், மாஸ்கோ அருகே நேரிட்ட சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், காயமடைந்த 40க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து போக்குவரத்துத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.