சீனாவுக்கு நாளை செல்கிறது உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு - கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு
Jan 13 2021 7:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் முதலில் பரவிய, சீனாவின் வூஹான் நகருக்கு, உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு, நாளை செல்கிறது. வூஹானில், 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின், உலக நாடுகள் பலவற்றுக்கும் தொற்று பரவியது. சீனாவின் ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. சீனா, இதனை மறுத்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வூஹான் நகருக்கு, நாளை வர இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது