புவி வெப்பமயமாதலைத் தடுக்‍க நடவடிக்‍கை - உலக நாடுகளுக்‍கு சீனா அழைப்பு

Jan 13 2021 7:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

இயற்கையைப் பேணி, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்‍கிட ஒன்றாக இணைந்து பணியாற்றிட உலக நாடுகளுக்‍கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. பல்லுயிர்ப்பெருக்‍கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்‍கும் நிலையில் சீனா இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

புவி வெப்பமயமாதல் குறித்து ஐக்‍கிய நாடுகள் அமைப்பு கடந்த 2017ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் பான் நகரில் நடத்திய உச்சி மாநாட்டில் ஒரே பூமி என்ற கருத்துருவை பிரான்ஸ் முன்வைத்தது. மக்‍கள் தொகை பெருக்‍கம், தொழிற்சாலைகளின் எண்ணிக்‍கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இயற்கைக்‍ காடுகளின் பரப்பளவு குறைந்து வருவது மற்றும் அதை மாற்றியமைப்பது குறித்து அந்த கருத்துரு விவாதிக்‍கிறது.

பான் மாநாட்டை தொடர்ந்து இயற்கைக்‍ காடுகள், பல்லுயிர்ப்பெருக்‍கம், சூழலியலைக்‍ காத்தல் போன்ற பல்வேறு நடவடிக்‍கைகளை உலக நாடுகளில் மேம்படுத்த, ஒரே பூமி என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை பிரான்ஸ் நாடு ஐக்‍கிய நாடுகள் அமைப்பு, உலக வங்கியுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இந்த ஆண்டின் கருத்தரங்கு இணையவழியில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய சீன துணைப் பிரதமர் Han Zheng, ஒருங்கிணைந்து செயல்பட்டு இயற்கையைப் பேணி, புவி வெப்பமயமாதலைத் தடுத்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்‍குவோம் என உலக நாடுகளுக்‍கு அழைப்பு விடுத்தார்.

சீனா ஏற்கெனவே சூழலியல் நடவடிக்‍கைகளைத் தொடங்கிவிட்டதாகவும், தேசிய பூங்காக்‍களை உருவாக்‍கி வருவதாகவும் ஒரே பூமி கருத்தரங்கில் பேசிய அவர் தெரிவித்தார். பல்லுயிர்ப்பெருக்‍கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சீனா உலக அளவில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், பிறநாடுகளுக்‍கும் இந்த அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00