வூஹான் சென்றடைந்த உலக சுகாதார அமைப்பினர் - 15 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 13 பேர் மட்டுமே ஆய்வில் பங்கேற்க அனுமதி

Jan 15 2021 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

வூஹானுக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பினரில் இருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு சீனாவின் வூஹான் நகருக்கு வருகை தருவதாக முன்னதாக அறிவித்து இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் எவ்வாறு வூஹான் பரிசோதனைக் கூடத்தில் இருந்து உலகுக்குப் பரவியது என்று விசாரணை மேற்கொள்ள இந்த குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 15 பேர்கொண்ட இந்த குழுவில் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வூஹானுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வூஹான் செல்ல இருக்கும் 15 உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகளுக்கு முன்னதாக சிங்கப்பூரில் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்குமே வைரஸ் தாக்கம் இல்லை என்று முடிவு வந்தது. இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நியூக்ளிக் ஆசிட் பரிசோதனை மூலம் இந்த முடிவு தெரிய வந்தது. ஆனால் இறுதியில் 2 விஞ்ஞானிகளுக்கு வைரஸ் தாக்கம் உள்ளதாக முடிவுகள் வந்தன. இதனையடுத்து அவர்களது சீனப் பயணம் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 13 விஞ்ஞானிகள் தனிவிமானம் மூலமாக சீனா வந்தடைந்தனர். இவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமையில் இருக்க சீன கம்யூனிச அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு இவர்களுக்கு வைரஸ் தாக்கம் இல்லை என்று நிரூபணம் ஆன பின்னரே சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00