ஜோ பைடன் நிர்வாகம் சந்திக்கப்போகும் சவால்கள் எளிதானதாக இருக்காது - மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் சந்திக்க தயாராக இருப்பதாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் உறுதி

Jan 20 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் சுலபமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் அதை சந்திக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின், 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் இன்று பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடிய, மார்டின் லூதர் கிங்கின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது, தடுப்பூசி வழங்குவது, பொருளாதாரத்தை மீட்பது என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். இலக்குகள், கடும் சவாலானது என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவோடு, அவற்றை எதிர்கொள்வோம் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். இனவெறியை முறியடிக்‍க கடந்த 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில், மார்ட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களுக்கான தேவை, தற்போதும் நாட்டில் நிலவி வருவது வேதனை அளிப்பதாக கமலா ஹாரிஸ் அப்போது தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00