இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள பிளிங்கன் நம்பிக்கை

Jan 20 2021 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும் என அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள Anthony Blinken நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக Anthony Blinken தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது பதவியேற்புக்கு முன்பாகவே இந்தியா உடனான உறவு குறித்து பேசிய அவர், கிளிண்டன் அதிபராக இருந்த காலகட்டத்திற்கு பின்னர் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு வலுவாகவே இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒபாமா ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் இருநாட்டு உறவு மிகவும் ஆழமாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இருநாட்டு தூதரக உறவு பாதிக்‍கப்பட்டதாக சுட்டிக்‍காட்டிய Anthony Blinken, இனி வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்‍கா உறவு மேலும் வலுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00