அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப்பின் பிரிவு உபச்சார விழாவை துணை அதிபர் மைக்‍ பென்ஸ் புறக்கணிப்பு

Jan 20 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வழியனுப்பும் விழாவில், துணை அதிபர் மைக்‍ பென்ஸ் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்‍காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், அடுத்த துணை அதிபராக அதே கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் இன்னும் சில மணிநேரத்தில் பதவியேற்கவுள்ளனர். இந்த விழாவில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வழக்‍கம் போல் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் இடம்பெறப்போவதில்லை என அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்‍கு முன் நாடாளுமன்றக்‍ கட்டடத்தை டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால், தேசிய பாதுகாப்புப் படையினர் 25 ஆயிரம் பேர் குவிக்‍கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், பிரிவு உபச்சார விழாவை முடித்துக்‍கொண்டு ஃப்ளோரிடாவுக்‍கு புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில், ட்ரம்ப்பின் பிரிவு உபச்சார விழாவில் அவரது துணை அதிபர் மைக்‍ பென்ஸ், பங்கேற்க மாட்டார் என்றும், மாறாக, ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00