அமெரிக்‍காவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் எஞ்சின் கோளாறு - தரையிறங்கும்போது விமானத்தின் பாகங்கள் உடைந்து சிதறி விழுந்ததால் பரபரப்பு

Feb 21 2021 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், இன்ஜின் செயலிழந்ததன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும்போது விமானத்தின் பாகங்கள் உடைந்து சிதறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Colorado மாகாணத்திலுள்ள டென்வர் நகரத்திலுள்ள விமான நிலையத்தில் இருந்து 231 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் விமானத்தின் இன்ஜின், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே செயலிழந்தது. இதனைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் டென்வர் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. தரையிறங்கும்போது விமானத்தின் சில பாகங்கள் உடைந்து சிதறி விழுந்தன. இந்த விபத்தினால், விமானத்தில் பயணித்தவர்களுக்கோ, தரையில் உள்ளவர்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை என Colorado காவல்துறையினர் அறிவித்துள்ளனர். விமானத்தின் பாகங்கள் சிதறியுள்ள காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த பாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால், பொதுமக்கள் யாரும் அதனை தொட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00