நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாதென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எதிரொலி நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஷர்மா ஒலி பிரிவு மத்தியக்‍குழுக்‍ கூட்டம் இன்று அவசரமாகக்‍ கூடுகிறது

Feb 24 2021 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஷர்மா ஒலி பிரிவின் மத்தியக்‍குழுக்‍ கூட்டம் இன்று அவசரமாகக்‍ கூடுகிறது.

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாடாளுமன்றத்தை கலைக்க அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பரிந்துரைத்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து, அதிபர் பித்யாதேவி பந்தாரி உத்தரவிட்டார். இதனை எதிர்த்தும், முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், அடுத்த 13 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், Baluwatar நகரில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்‍ குழுக்‍ கூட்டம் இன்று கூடுகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்தக்‍ கூட்டத்தில் முக்‍கிய விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்‍கப்படும் எனத் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00