ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது : அமெரிக்கா அறிவிப்பு

Feb 26 2021 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன. முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு சிறிது காலத்துக்கு பின்னர்தான் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இதன் மருத்துவ பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி விலை குறைவானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடுமையான நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி 85 சதவீதத்துக்கும் மேலாக பலன் அளிக்கும் என தரவுகள் கூறுகின்றன. வரும் மார்ச் மாத இறுதிக்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்க முடியும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00