சீனாவில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது - அதிபர் Xi Jinping அறிவிப்பு

Feb 26 2021 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் Xi Jinping அறிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் வகையிலும், வறுமை ஒழிப்பில் போராடியவர்களை கவுரவிக்கும் வகையிலும் பீஜிங்கில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிபர் Xi Jinping கலந்து கொண்டு பேசியபோது, சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர் எனத் தெரிவித்தார். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள், கிராமப்புறங்களில் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தவும், வளமான சமுதாயத்தை உருவாக்‍கவும் முக்‍கியத்துவம் அளிக்‍கப்படும் என்றும் சீனா அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00