பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்ட சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் - அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

Feb 27 2021 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானே உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளரான ஜமால் கசோகி, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார். இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கசோகி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார். அப்போது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் அமிலத்தில் கரைக்‍கப்பட்டன.

இந்த கொலையை சவுதி அரேபியா அரசு தான் திட்டமிட்டு செய்ததாக துருக்கி குற்றம்சாட்டியது. வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது. இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜமால் கசோகி கொலை, சவுதி இளவரசர் உத்தரவோடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்‍காவின் புலனாய்வு அறிக்‍கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த அறிக்‍கையை ஏற்க முடியாது என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00