​​லிபியா அருகே கடலில் தத்தளித்த நூற்றுக்‍கணக்‍கான அகதிகளை ஜெர்மனி தன்னார்வ அமைப்பு பத்திரமாக மீட்பு

Mar 1 2021 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

​​லிபியா அருகே கடலில் தத்தளித்த நூற்றுக்‍கணக்‍கான அகதிகளை ஜெர்மனியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு பத்திரமாக மீட்டுள்ளது.

லிபியா உள்ளிட்ட ஆஃப்ரிக்‍க நாடுகளில் மிக மோசமான அரசியல் சூழ்நிலை காணப்படுவதால் பொதுமக்‍கள் அகதிகளாக வெளியேறுவது தொடர்ந்து வருகிறது. தீவிரவாத தாக்‍குதல்கள், பசி- பட்டினி போன்ற காரணங்களும் இது போல் அகதிகள் வெளியேற காரணமாக அமைந்துள்ளன. இப்படி வெளியேறுபவர்கள் ஆபத்தான கடற்பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளதால் அவர்களில் பலர் உயிரிழக்‍கும் அவலமும் தொடர்ந்து வருகிறது. இது போல் கடலில் தத்தளிக்‍கும் அகதிகளை மீட்பதற்காக இத்தாலி நாட்டின் தன்னார்வ அமைப்பு ஒன்று மீட்புக்‍ கப்பலுடன் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது கடந்த வார இறுதியில் மட்டும் 363 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பின்னர் கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே, இந்த ஆண்டில் இது வரை 160க்‍கும் மேற்பட்ட அகதிகள் இது போன்ற ஆபத்தான கடற்பயணத்தின் போது உயிரிழந்ததாக ஐக்‍கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00