ரஷிய அதிபர் புதினின் அரசை கடுமையாக விமர்சித்து வந்த அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்ட விவகாரம் : ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

Mar 3 2021 6:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது.

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 17-ந்தேதி ஜெர்மனியில் இருந்து ரஷியா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனிடையே இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.‌‌ அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மீதான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00