கொரோனா நெருக்கடி, இந்த ஆண்டுக்குள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Mar 3 2021 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா நெருக்கடி, இந்த ஆண்டுக்குள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனை இயல்புக்கு மாறானது என, உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்ட இயக்குநர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடுப்பூசியால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைக்கப்படுமே தவிர, கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துவிடாது என்றும் அவர் விளக்கமளித்தார். தடுப்பூசி திட்டங்கள் அமல்படுத்தப்படும் அதே நேரத்தில், நோய் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என, மைக்கேல் ரியான் கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவலைக் குறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புள்ளி விவரங்கள்படி, கொரோனா தடுப்பூசியால் தொற்று பரவல் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்தினால், கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்ட மைக்கேல் ரியான், இப்போதுள்ள சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மிகுந்த கட்டுக்குள் இருக்கிறது என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00