தைவானில் நேரிட்ட ரயில் தடம்புரண்ட விபத்தில் 50 பேர் உயிரிழப்பு - பெட்டிகளை மீட்கும் பணிகள் விரைவில் நிறைவேறும் என அரசு அறிவிப்பு
Apr 5 2021 8:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைவானில் நேரிட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த கடைசி நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தைவானில் கடந்த வாரம் ஹூவாலியென் நகருக்கு அருகே சுரங்கப் பாதைக்குள் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. ரயில் தண்டவாளத்தின் அருகில் நின்றிருந்த லாரி ஒன்று பிரேக் தளர்ந்ததால் தண்டவாளத்துக்கு நகர்ந்து வந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என கருதப்படுகிறது. அந்த ரயிலில் சுமார் 500 பேர் பயணம் செய்த நிலையில், முதல் நான்கு பெட்டிகளில் இருந்தவர்களில் 50 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்பகுதியில் உள்ள பெட்டிகளில் பயணம் செய்தவர்களில் பலர் காயங்களின்றி உயிர் தப்பினர். சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பெட்டிகளில் 5 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு நாளில் மீதமுள்ள பெட்டிகளும் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.