சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது

May 11 2021 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸி அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குரையிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகளின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு சவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஈரான் - சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவை கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல்முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00