நேபாள பிரதமராக மீண்டும் கே.பி.சா்மா ஒலி நியமனம் - எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க தவறியதால் அதிபா் உத்தரவு

May 14 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளத்தில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிவிட்டதால், கே.பி.சா்மா ஒலியையே மீண்டும் பிரதமராக அந்நாட்டு நாட்டு அதிபா் நியமித்தார்.

அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் அதிகரித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை கலைக்கும்படி, பிரதமர் ஒலி பரிந்துரைத்தார். இதை, அதிபர் பித்யா தேவி பண்டாரி ஏற்றார். பிரதமரின் முடிவுக்கு நேபாள உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில், அதிபரின் உத்தரவின்படி, நேபாள நாடாளுமன்றத்தில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு எதிராக நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தோல்வியடைந்தார். இதன்பின், அதிபர் பித்ய தேவி பண்டாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சி அமைக்க தகுதி உள்ள கட்சிகள் நேற்றைக்குள் அதிபரை சந்தித்து உரிமை கோர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிவிட்டதால், கே.பி.சா்மா ஒலியையே மீண்டும் பிரதமராக அந்நாட்டு அதிபா் வித்யாதேவி பண்டாரி நேற்று இரவு நியமித்தார். இதையடுத்து, பிரதமராக கே.பி. சா்மா ஒலி இன்று பதவியேற்க உள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00