டெல்டா வகை கொரோனா இன்னும் தீவிரமாக பரவலாம் - அமெரிக்‍காவின் நோய்க்‍ கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தகவல்

Jul 31 2021 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகில் 100 நாடுகளுக்‍கு மேல் பரவியுள்ள டெல்டா வகை கொரோனா, எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக, பெரியம்மை போல எளிதாக பரவும் ஆபத்து உள்ளதாக அமெரிக்‍காவின் நோய்க்‍ கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது 100 நாடுகளுக்‍கு மேல் பரவியுள்ளது. எதிர்காலத்தில் இது மேலும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ், மெர்ஸ், சார்ஸ், எபோலா, பருவ காய்ச்சல், சின்னம்மை, பெரியம்மை போல வேகமாக பரவலாம் என்றும், பெரியம்மை போல அதிவேகமாக தொற்றி, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்‍கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்‍ கொண்டவர்களுக்‍கு இந்த நோய்த் தொற்றின் தீவிரம் 90 சதவீதம் குறையும் என்றும், அதேநேரம், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் நோய் தீவிரத்தை குறைப்பதாகவும், ஆனால், தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00