பிலிப்பைன்ஸை தாக்‍கிய சூறாவளியால் ஏராளமான வீடுகள் சேதம் : 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

Sep 13 2021 7:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டின் வட மாகாணத்தை தாக்‍கிய சூறாவளியால், ஏராளமான வீடுகள் சேதமடைந்ததோடு, மின்சாரமும் துண்டிக்‍கப்பட்டதால் பொதுமக்‍கள் கடும் அவதிக்‍கு ஆளாகினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Sabtang நகரில், Chanthu சூறவாளியால், கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், மணிக்‍கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்‍காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. Batanes மாகாணத்தின் வடபகுதியில் மின்சாரம் துண்டிக்‍கப்பட்டதால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்‍கப்பட்டனர். சூறவாளியால் அடிக்‍கடி பாதிக்‍கப்படும் இந்த மாகாணத்தில் பெரும்பாலான வீடுகள் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதால், வீடுகளுக்‍கு பெரும் சேதம் ஏற்படவில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வீடுகள் கட்டப்படவில்லை என்றால், கடுமையான இந்த சூறாவாளியால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்‍கும் என அப்பகுதி மக்‍கள் தெரிவித்துள்ளனர். இந்த புயல் காற்றால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும், பாதிப்பு குறித்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00