விண்வெளி சுற்றுலாவுக்‍கு தயாராகி வரும் Space X நிறுவனம் : ராக்‍கெட் மூலம் 4 பேர் பயணம் மேற்கொள்ளும் கவுண்டவுன் வரும் புதன் கிழமை தொடக்கம்

Sep 13 2021 7:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவைச் சேர்ந்த Space X நிறுவனம், ராக்‍கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்‍கு சுற்றுலாவுக்‍கு அனுப்ப தயாராகி வருகிறது.

விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்‍காவைச் சேர்ந்த Space X நிறுவனர் Elon Musk-ன் ராக்‍கெட் மூலம், Shift-4 Payments நிறுவனத்தின் தலைவர் Jared Isaacman என்ற கோடீஸ்வரரின் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர், இந்த வாரம் விண்வெளிக்‍கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்தப் பயணத்திற்கான கவுண்டவுன் வரும் புதன் கிழமை தொடங்கவுள்ள நிலையில், Inspiration-4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம், கென்டி விண்வெளி மையத்தில் இருந்து Space X நிறுவனத்தின் Falcon & 9 என்ற ராக்‍கெட் மூலம் விண்ணில் பாய தயாராகி வருகிறது. மணிக்‍கு 27 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்‍கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்று வரும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்குப் பிறகு அட்லாண்டிக்‍ கடலில் பயணம் நிறைவடையும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்வெளிக்‍கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்‍கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00