அஃப்கானிஸ்தானுக்‍கு உலக நாடுகள் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி - ஆப்கன் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக அறிவிப்பு

Sep 15 2021 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தான் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக உலக நாடுகள் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

ஆப்கனில் தாலிபன் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான உணவுப்பஞ்சம் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம் மற்றும் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் கூடி உள்ளனர். இது தவிர ஏராளமானோர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஆப்கன் மக்களின் துயரம் குறித்து ஆராய ஐ.நா. சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண துறையின் துணை பொதுச்செயலர் மார்டின் கிரிப்பித், ஆப்கன் மக்களின் துயர் தீர்க்க, உறுப்பு நாடுகள் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், ஆப்கன் மக்கள் படும் துயரம் கவலை அளிப்பதாக கூறினார். தாலிபன் அரசின் தயவின்றி, ஆப்கன் மக்களுக்கு உதவ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00