சீனாவில் டெல்டா வகை கொரோனா பரவல் - பள்ளிகள் மூடல் : புட்டியான் நகர மக்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள உத்தரவு

Sep 15 2021 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மூலம் கொரோனா பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் 2-வது அலை, 3-வது அலை பரவிய நிலையில், சீனாவில் அதன் தாக்கம் மிகக்‍ குறைவாகவே உள்ளதாகக்‍ கூறப்பட்டது.

இந்நிலையில், புஜியான் மாகாணத்தில் உள்ள புட்டியான் நகருக்கு, அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100-க்கும் அதிகமானோருக்கு டெல்டா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட, அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்கு டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எனவே புட்டியான் நகரில் உள்ள பள்ளிகளுக்‍கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00