ஆண் நண்பருடன் சென்ற பெண் ஒரு மாதத்திற்குப் பின் மாயம் - நாடு முழுவதும் தேடும் அமெரிக்‍க புலனாய்வுத் துறை

Sep 17 2021 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருந்து காணாமல் போன இளம்பெண்ணை தேடும் முயற்சிகளை, அவரது குடும்பத்தினர் நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்‍காவின் ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த Gabby Petito என்ற 22 வயதுப் பெண் கடந்த ஜுன் மாதம் தமது ஆண் நண்பர் 23 வயது Brian Laundrieயுடன் ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பின்னர் தமது பயணத்தின் ஒவ்வொரு நாளும் அவர் சென்ற இடங்களில் இருந்து நிழற்படங்கள் மற்றும் வீடியோக்‍களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்தார். இதற்கிடையே கடந்த மாத இறுதியில் அவருடனான தொடர்பு துண்டிக்‍கப்பட்டது. அப்போது அவர் வ்யாமிங் மாநிலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. இதற்கிடையே, அவருடன் பயணம் மேற்கொண்ட ஆண் நண்பர் தமது வீட்டிற்குத் தனியாகத் திரும்பிவந்தார். ஆனால் Gabby Petito-வைப் பற்றிய எந்தக்‍ கேள்விக்‍கும் அவர் பதில் அளிக்‍கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்‍கப்பட்டது. தற்போது அந்த புகார் அமெரிக்‍க புலனாய்வுத் துறையினரின் வசம் ஒப்படைக்‍கப்பட்டுள்ளது. இதற்கிடையே, Gabby Petitoவின் தந்தை Joeயும், அவருடைய தாயின் தற்போதைய கணவரும் அவரைத் தனித்தனியே தேடிவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00