அமெரிக்‍காவில் மகனுக்‍கு காப்பீட்டுத் தொகை கிடைக்‍க தற்கொலை செய்யத் திட்ட​மிட்ட வழக்‍கறிஞர் கைது

Sep 17 2021 8:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில், மகனுக்‍கு காப்பீட்டுத் தொகை கிடைக்‍கவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்யத் திட்ட​மிட்ட வழக்‍கறிஞரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்‍காவின் தென் கரோலினா மாநிலத்தில் உள்ள ஹாம்ப்டன் கவுன்டியைச் சேர்ந்த வழக்‍கறிஞர் Alex Murdaugh, கடந்த 4-ம் தேதி துப்பாக்‍கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். ஆனால், காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்‍குப் பின் குணமடைந்த நிலையில், தற்கொலை முயற்சி குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் உயிரிழந்தால், மகனுக்‍கு காப்பீட்டுத் தொகை கிடைக்‍கும் என்பதற்காக தற்கொலை செய்ய முயன்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக்‍ கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் வழக்‍கு தொடர்ந்தனர். நீதிமன்ற விசாரணையின் போது, அவரது வழக்‍கறிஞரின் கோரிக்‍கையை ஏற்று சுமார் 14 லட்சம் ரூபாய்க்‍கு பிணையில் விடுவித்த நீதிமன்றம், அவரை மறுவாழ்வு மையத்தில் பராமரிக்‍க உத்தரவிட்டது. 53 வயது Alex Murdaughன் மனைவியும், ஒரு மகனும் கடந்த ஜுன் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00