யாராலும் வெல்லமுடியாத வகையில் ராணுவம் உருவாக்கப்படும் - ராணுவ தளவாட கண்காட்சியில் வடகொரியா அதிபர் சூளுரை

Oct 13 2021 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில், வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவெடுக்கும் என அந்நாட்டு அதிபர் Kim Jong Un சூளுரைத்துள்ளார்.

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா, அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அண்மை காலமாக வடகொரியா தனது ராணுவ திறனை வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்து அமெரிக்‍கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தியது.

இந்நிலையில் வடகொரியா தனது ராணுவ பலத்தை உலகுக்கு காட்டும் வகையில் மிகவும் அரிதான ஆயுத கண்காட்சியை நடத்தியது. தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் உள்பட பல்வேறு அதிநவீன ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் ராணுவ வீரர்களுடன் உரையாற்றிய அந்த நாட்டு அதிபர் Kim Jong Un, அமெரிக்காவின் விரோதபோக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக வடகொரியாவின் ராணுவம் உருவாக்கப்படும் என சூளுரைத்தார்.

பின்னர் நடைபெற்ற ராணுவ வீரர்களின் மெய்சிலிர்க்‍க வைக்‍கும் சாகசங்களை, அதிபர் Kim Jong Un, ராணுவ உயர் அதிகாரிகளுடன் உற்சாகத்துடன் கண்டு ரசித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00