ரஷ்யாவில் இந்த ஆண்டிலேயே மிக அதிகமாக 984 பேர் உயிரிழப்பு - தொடர்ந்து அதிகரிக்‍கும் புதிய பாதிப்புக்‍கள் மற்றும் உயிரிழப்பு

Oct 13 2021 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் இந்த ஆண்டிலேயே மிக அதிக எண்ணிக்‍கையாக ஒரே நாளில் 984 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரசைக்‍ கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே தயாரான ஸ்புட்னிக்‍ வீ தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் தலைநகர் மாஸ்கோ மற்றும் 30 பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவிவருகிறது. இந்நிலையில், தற்போது ஒரே நாளில் 28 ஆயிரத்து 717 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில் 984 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிக்‍கத் தொடங்கிய பின், எப்போதும் இல்லாத எண்ணிக்‍கையிலானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் புதிதாகப் பாதிக்‍கப்படுபவர்களின் எண்ணிக்‍கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்‍கை ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்துவருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்நாட்டு அரசு வேகப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00