ரஷ்யாவில் கொரோனா பாதிப்பில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு : 24 மணி நேரத்தில் 1,106 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

Oct 27 2021 7:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பில் உயிரிழப்போரின் எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மீண்டும் ஒருமுறை அந்த எண்ணிக்‍கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, அந்நாட்டின் கேமிலியோ நிறுவனம் தயாரித்து அளிக்‍கும் ஸ்புட்னிக்‍ வீ தடுப்பூசி பொதுமக்‍களுக்‍குச் செலுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்‍கொள்ள பொதுமக்‍கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுதில்லை. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்புக்‍களும், உயிரிழப்புக்‍களும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 8 நாட்களில் 6வது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய புள்ளி விவரங்களின் படி, கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 24 மணிநேரத்தில் ஆயிரத்து 106ஆக அதிகரித்துள்ளது. இதே போல், ஒரே நாளில் 36 ஆயிரத்து 446 பேருக்‍கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00