ஏமனுக்கு ஆதரவாக செயல்படும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்‍கு, அமெரிக்‍கா ஆதரவு அளிப்பதா? கண்டனம் தெரிவித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Nov 23 2021 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டிற்கு ஆதரவாக போரிட்டு வரும் சவுதி அரேபியா கூட்டுப்படைகளுக்‍கு, அமெரிக்‍கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏமன் அரசுக்‍கு எதிராக, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகின்றனர். இதில், தலைநகர் சனாவைக்‍ கைப்பற்றிய நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்‍கு ஆதரவாக ஈரான் அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஏமன் அரசுக்‍கு ஆதரவாக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்‍குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏமன் மற்றும் சவுதி அரேபியா கூட்டுப்படைகளுக்‍கு, அமெரிக்‍கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்‍காவின் இந்த நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, தலைநகர் சனாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்‍கா தனது முடிவை மாற்றிக்‍கொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00