ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை வாங்கியது குறித்த விவகாரம் : அமெரிக்க எதிர்ப்புக்கிடையே இந்தியா ஒப்பந்தம் - இந்தியா மீது பொருளாதாரத்தடைக்கு வாய்ப்பில்லை

Nov 24 2021 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவிடம் ஏவுகணை தடுப்பு ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்திய விவகாரத்தில், பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என அமெரிக்‍கா தெரிவித்துள்ளது.

அமெரிக்‍காவின் கடும் எதிர்ப்பையும் மீறி எஸ்.400 ரக ஏவுகணை அழிப்பு ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்‍கா, இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்‍கப்போவதாக எச்சரித்திருந்தது. எனினும், நட்பு நாடு என்பதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனாலும் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கும் பட்சத்தில் அது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம் என்பதால், பெரும்பாலும் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00