கொலம்பியாவில் ரூ.2,250 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் : 2 போதைப்பொருள் ஆய்வகங்கள் அழிப்பு

Nov 24 2021 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொலம்பியாவில், சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, அந்நாட்டு ஆயுதப் படையினர் பறிமுதல் செய்ததுடன், 2 போதைப்பொருள் ஆய்வகங்களையும் அழித்துள்ளனர்.

கொலம்பியாவின் Nairno மாகாணத்தில் உள்ள சமநீகோ நகராட்சியில், சட்டவிரோதமாக 2 போதைப்பொருள் ஆய்வகங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இதுகுறித்த தகவலின் பேரில், அந்நாட்டு ஆயுதப்படையினர் போதைப்பொருள் ஆய்வங்கள் செயல்படும் இடங்களில், துப்பாக்‍கி ஏந்தியபடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 10 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 2 ஆய்வகங்களையும் ஆயுதப்படைப் படையினர் அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்‍க டாலர்கள் என கணக்‍கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 250 கோடியாகும்.

கொலம்பியாவில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் கடந்த ஆண்டு மட்டும் நடத்திய சோதனையில், 505 டன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00