சாலமன் தீவில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் வன்முறை - நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீவைப்பு

Nov 25 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாலமன் தீவுகளில் அந்நாட்டு பிரதமர் பதவி விலகக்‍கோரி நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டது.

தென்பசிபிக் பெருங்கடலில் உள்ளது சாலமன் தீவுகள். இந்ந நாட்டின் பிரதமராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் Manasseh Sogavare. அண்மையில் இவர், தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் ஏற்கனவே அறிவித்தபடி நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இதை தொடர்ந்து, பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்‍கும் போராட்டக்‍காரர்களுக்‍கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்‍கும் ​தீவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00