ஒமைக்ரான் வைரஸ் மிதமான அறிகுறிகளையே ஏற்படுத்துவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் - பீதி அடைய தேவையில்லை என தொற்றை கண்டறிந்த தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்

Nov 29 2021 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை மிதமான அறிகுறிகளையே ஏற்படுத்துவதாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், அதிக கவலைப்படத் தேவையில்லை என தென்னாப்பிரிக்காவில் இந்த தொற்றை கண்டறிந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான Angelique Coetzee, அந்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததை கண்டறிந்தவர்களில் ஒருவர் ஆவார். கடந்த 18-ம் தேதியன்று, அவரது மருத்துவமனைக்கு வந்த 7 நோயாளிகள், டெல்டா வைரஸ் அறிகுறிகள் இல்லாமல், மாறுபட்ட அறிகுறிகளுடன் இருப்பதை கண்டறிந்த அவர், அவர்களது மாதிரிகளை, மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தார். டெல்டா வைரஸ் தொற்றின்போது ஏற்பட்ட, வாசனை இழப்பு, சுவை இழப்பு, ஆக்சிஜன் அளவு குறைதல் போன்ற தீவிரமான அறிகுறிகள் ஒமைக்ரான் தொற்றினால் ஏற்படவில்லை எனவும், இந்த தொற்றினால், மிதமான அறிகுறிகளே ஏற்படுவதாகவும், Angelique Coetzee தெரிவித்துள்ளார். இதுவரை ஒமைக்ரான் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள், எனவும், இந்த தொற்றைக் கண்டு அதீதமாக கவலைப்படத் தேவையில்லை எனவும், Angelique Coetzee தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00