உருமாறிய புதிய Omicron வைரசால் இங்கிலாந்தில் 9 பேர் பாதிப்பு - போர்ச்சுக்‍கல் நாட்டில் 13 பேருக்‍கு ஒமைக்ரான் பரவியுள்ளதாக தகவல்

Nov 30 2021 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் 9 பேர், உருமாறிய புதிய Omicron வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். போர்ச்சுக்‍கல் நாட்டில் 13 பேருக்‍கு Omicron பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்‍கின்றன.

இங்கிலாந்தில், ஏற்கெனவே 3 பேர் Omicron வைரசால் பாதிக்‍கப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்தில் தற்போது 6 பேருக்‍கு தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் Lanarkshire பகுதியையும், 2 பேர் Glasgow நகரையும் சேர்ந்தவர்கள் என ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட 3 பேரும், தென்னாஃப்ரிக்‍காவுக்‍குச் சென்றுவந்தது தெரியவந்துள்ளது. ஆனால், ஸ்காட்லாந்தில் தொற்று பரவியுள்ளவர்கள் ஆஃப்ரிக்‍கப் பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை என ஸ்காட்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். Omicron வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை உடையது என்பதால், அண்மையில் தென்னாஃப்ரிக்‍காவுடன் பயணத் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்‍கு உட்படுத்தப்படுவார்கள் என ஸ்காட்லாந்து சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போர்ச்சுகல் நாட்டில் Omicron வைரஸ் தொற்று பரவிய 13 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தலைநகர் Lisbon-ல் உள்ள கால்பந்தாட்ட சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் தென்னாஃப்ரிக்‍கா சென்று வந்த நிலையில், அவருக்‍கு Omicron தொற்று பரவியுள்ளதாகவும் மருத்துவப் பரிசோதனையில் அது, உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றவர்களுக்‍கு தென்னாஃப்ரிக்‍க தொடர்பு இல்லாததால், உள்நாட்டிலேயே வேறு நபர்களிடமிருந்து அவர்களுக்‍கு Omicron தொற்று பரவியிருக்‍கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00